இணையத்தில் வைரலாகும் தோனி – ட்ரம்ப்பின் புகைப்படம்: வெளியான காரணம்

0
107

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிப்பெற்றதன் பின்னர் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் தோனியும் (MS Dhoni) டொனல்ட் ட்ரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2023-ல் எம்.எஸ்.தோனி. அமெரிக்கா (USA) சென்றிருந்த போது தோனியை, கோல்ஃப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்புக்கு தோனி சென்றிருந்தார்.

அப்போது ட்ரம்புடன் இணைந்து தோனி சிறிது நேரம் கோல்ஃப் விளையாடி விட்டு இருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இணையத்தில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட்டை பொறுத்த வரையில் தோனிக்கு என்று இரசிகர் பட்டாளமே உள்ளது. தோனியின் ஜெர்ஸி எண் 7 இதுவும் மிகவும் பிரபல்யமானது.

எனவே இரசிகர்கள் சில விடயங்களை திகதிகளை அடிப்படையாக வைத்து, தோனியுடன் இணைத்து thala for a reason என்று பதிவிடுவார்கள். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2024.22.06 வெளியாகியதுடன் டொனல்ட் ட்ரம்ப்பும் வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் 6+1+1+2+2+4= 16, 1+6=7 இந்த காரணத்திற்காக தல என பதிவிட்டு இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை ட்ரம்ப் ஏற்கெனவே தோனி, சுனில் காவஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களை புகழ்ந்து பேசியுள்ளதுடன் இவர்கள் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று அவர் அப்போது புகழாரம் சூட்டியியுள்ளமை குறிப்பிடத்தக்கது.