பாலியல் வழக்கில் சிக்கி விடுதலையான 11 மாதங்களின் பின் இன்று நாடு திரும்பும் தனுஷ்க குணதிலக்க

0
220

பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க 11 மாதங்களுக்குப் பின்னர் இன்று இலங்கை திரும்பவுள்ளார்.

32 வயதான தனுஷ்க குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிண்டர் அப் மூலம் தொடர்புக் கொண்ட சிட்னி பெண் ஒருவரை அவரது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவில் ஈடுபட பலாத்காரம் செய்யதாக குற்றம் சுமத்தப்பட்டதுடன் குறித்த சம்பவத்தில் அவர் சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சிட்னி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை சிட்னி நீதிமன்றம் வழங்கியதுடன் தீர்ப்பின் பிரகாரம் குறித்த வழக்கில் இருந்து குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டார்.

எட்டு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

பாலியல் பலாத்கார வழக்கில் அவர்  குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முன்னதாக தெரிவித்திருந்தது.

தடை நீக்கப்பட்ட பின்னர்  தனுஷ்க குணதிலக்க மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. தனுஷ்க குணதிலக 11 மாதங்களின் பின் இன்று நாடு திரும்புகிறார்