விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் ஒன்றுசேரப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கோலிவுட் முதல் ஹோலிவுட் வரை டொப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.
தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களை நடித்து முடித்துள்ள தனுஷ் விரைவில் தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, விசாரணை, நானும் ரௌடிதான், விஐபி 2, வடசென்னை, மாரி 2 ஆகிய படங்களை தனுஷ் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா திடீரென பிரிவதாய் அறிவித்தமை ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் இருவரும் நடந்ததை மறந்துவிட்டு குழந்தைகளுக்காக மீண்டும் ஒன்றுசேர உள்ளார்கள் . இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து திருப்பதிக்கு செல்லவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
