பெண் போட்டியாளர்களை சுற்றியே வட்டமிட்டு வந்த அசல் கோலார் யாருகிட்ட செமத்தியா வாங்கப் போறாருன்னு தெரியல என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், தனலட்சுமி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார்.
அண்ணான்னு ஏன் கூப்பிடுற என தனலட்சுமியிடம் வழிந்த அசலை அப்படித்தான் கூப்பிடுவேன் என தனலட்சுமி அடித்து நொறுக்கி இருக்கிறார்.

பெண் போட்டியாளர்கள் யாருமே எதிர்த்து பேசவில்லையே, அவர் ஜாலியா விளையாடுறாரு என அசல் கோலாருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தனலட்சுமி முதல் பெண்ணாக அசல் கோலாரின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டும் விதமாக நேற்று சண்டைப் போட்டது பிக் பாஸ் வீட்டையே போர்க்களமாக மாற்றியது.

பிக் பாஸ் போட்டியாளர் தனலட்சுமி அசல் கோலாரை அண்ணான்னு கூப்பிட்டா, அப்படி கூப்பிடக் கூடாதுன்னு சொல்றாரு என ஆரம்பித்து அசல் கோலாரு பண்ண அத்தனை லீலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறிவிட்டது.
அசீம், ராம் ராமசாமி உள்ளிட்டோர் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை தடுக்க பெருமுயற்சிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் தலைவர் ஜிபி முத்து தனலட்சுமி பிரச்சனை என்பதால் தலையிடவில்லை.

மேலும் பெண் போட்டியாளர்களிடம் கண்ணியமாக நடக்க தெரியாத அசல் கோலார் போன்ற போட்டியாளர்களை இன்னும் ஏன் உள்ளே வச்சிருக்கீங்க, வெளியே அனுப்புங்க என பிக் பாஸ் ரசிகர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
தனலட்சுமிக்கு எதிராகவும் அசல் கோலார் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
