பூர்ணிமாவுக்கு விட்டு கொடுத்த அர்ச்சனா: டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் திடீர் திருப்பம்

0
202

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அர்ச்சனா தனக்கு கிடைத்த புள்ளிகளை பூர்ணிமாவுக்கு வழங்கி இருக்கிறார். இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அவர் போட்டியிட தகுதியற்றவர் என சக போட்டியாளர்கள் தேர்வு செய்ததால் அவரால் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் போட்டியிட முடியாத சூழல் உருவானது.

இதனிடையே அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட டான்ஸ் மாரத்தான் சுற்றில் சிறந்த பர்பார்மராக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா தன்னால் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாது என்பதால் அதன்மூலம் தனக்கு கிடைத்த பாயிண்ட்டை பூர்ணிமாவுக்கு வழங்கி இருக்கிறார்.

அர்ச்சனாவின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத பூர்ணிமா அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார். எலியும் பூனையுமாக இருந்த அர்ச்சனா- பூர்ணிமா இப்படி ஒரே டாஸ்க்கில் ஒட்டிக் கொண்டது மாயாவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.