தேஷபந்து தென்னகோன் ஐந்து இலட்சம் நட்டஈடு வழங்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

0
231

அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்திருந்த ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட பின்புலத்திலேயே இந்த உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.