வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று ஜனநாயகப் போராட்டம்..!

0
259

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று(21) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எட்டு மாவட்டங்களிலும் ஜனநாயகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு ஒழுங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

v

ஒரே நேரத்தில் போராட்டம் 

போராட்டமானது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் காந்திப்பூங்காவிலும், அம்பாறையில் மல்வத்தை சந்தியிலும், திருகோணமலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு முன்பாகவும் கலை 10.00 மணிக்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று வடக்கிலும் ஐந்து மாவட்டங்களிலும் குறித்த நேரத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.