மின் கட்டணத்தை மீண்டும் 32% ஆல் அதிகரிக்க கோரிக்கை..

0
197

மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தி உள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஐம்பத்து நான்கு பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சு தகவல்

எனினும் உத்தேச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டால், ஒரு வருடத்திற்குள் கட்டணங்கள் 200% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.

கட்டணங்கள் 200% அதிக வாய்ப்பு

கடும் வரட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதால் 3500 மெகாவாட் மின்சார உற்பத்தி கடும் நெருக்கடியை சந்திக்கலாம் என்பதால் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் 42 ரூபா தொகை 56 ரூபாவாக அதிகரிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2022 முதல் மூன்று மின் கட்டண திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

உத்தேச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டால், ஒரு வருடத்திற்குள் கட்டணங்கள் 200%க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு விவகாரம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதிய நிபந்தனை

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பிரேரணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோருவதாக அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.

மீண்டும் மின் கட்டணத்தை பாரிய அளவு அதிகரிக்க கோரிக்கை: இலங்கை மின்சார சபை | Lankan Electricity Bill Will Increase Again

சர்வதேச நாணய நிதியம் மீண்டும் இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்த நேற்று முன்மொழிந்துள்ளது.

கட்டணத்தை உயர்த்த முயற்சி

ஆண்டுக்கு இருமுறை மின் கட்டணம் உயர்த்தப்படும் என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மூன்றாவது முறையாக அதிகரிக்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது.

இந்த ஆண்டு நான்காவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீண்டும் மின் கட்டணத்தை பாரிய அளவு அதிகரிக்க கோரிக்கை: இலங்கை மின்சார சபை | Lankan Electricity Bill Will Increase Again

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும், மின் கட்டணம் 56% உயர்த்தப்படுகிறது. இந்த முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் பெறப்படும்.

இதை நிராகரிக்கிறோம் என்கிறோம். இது சட்டத்திற்கு எதிரானது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், இந்த ஆண்டு மின் கட்டணம் 200% அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருப்பதால் அனல் மின் நிலையங்களிலிருந்தும் மின்சாரத்தைப் பெற வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.