டெல்லி குண்டுவெடிப்பு; மருத்துவர் உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு

0
18

இந்தியாவின் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறிய சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்வலைகளை ஏற்​படுத்​தி​யது.

காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இது தொடர்​பான விசா​ரணை​யில் வெடிபொருளு​டன் காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரியவந்தது.

வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் உறுதியானது. இந்தச் சூழலில் இன்று (14) புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில் அங்கு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் மருத்துவர் உமர் நபியின் உறவினர்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கைது படலத்தை விசாரணை அமைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

சந்தேக நபர்கள் மூவரும் சுவிட்​சர்​லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்​படுத்தி சதி திட்​டம் தீட்டியதாகவும், சுமார் 26 லட்சம் ரூபாயை இதற்காக அவர்கள் நிதியாக திரட்டி உள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.