வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

0
32

வெனிசூலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமிப்பதாக வெனிசூலா நீதிமன்றம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவியேற்றார். அவருக்கு அவரது சகோதரரும் தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்வின் போது உரையாற்றிய டெல்சி ரோட்ரிக்ஸ், “எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பினால் வெனிசூலா மக்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கு நான் ஆழ்ந்த வருத்தத்துடன் இந்தப் பொறுப்பை ஏற்கிறேன்” என வலது கையை உயர்த்தி உறுதிமொழி எடுத்தார்.