ஜனாதிபதி தேர்தலில் தமிழரை களமிறக்க தீர்மானம்!

0
214

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழரை களமிறக்க தீர்மானம்! | Decision To Field Tamils Presidential Election

அதன் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது.

மன்னரில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் வார இறுதியில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.