பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல்; பலத்த பாதுகாப்பு

0
154

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த மின்னஞ்சல் தொடர்பாக கூகிளிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மின்னஞ்சல் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கு சென்றுள்ளதாகவும் சர்வதேச குற்றவியல் காவல்துறையின் உதவியுடன் மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நேற்று முன் தினம் (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.