கேரளாவை உலுக்கிய இளைஞனின் மரணம்; பெண்ணுக்கு ஜாமீன்; பலரும் எதிர்ப்பு

0
20

கேரளாவில் கடந்த மாதம் பேருந்தில் தன்னிடம் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக கூறி ஷிம்ஜிதா என்கிற பெண் தனது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

தீபக் என்கிற அந்த நபர் தனக்கு பேருந்தில் பாலியல் தொல்லை செய்வதாக சொல்லி அவர் வீடியோ வெளியிட அந்த வீடியோ வைரலானது. இதையடுத்து பலரும் தீபக்கை திட்ட துவங்கினார்கள்.

இதில் மன உளைச்சல் அடைந்த தீபக் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உண்மையில் தனது வீடியோவை நிறைய பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஷிம்ஜிதா அந்த வேலையை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மரணமடைந்த தீபக்கின் மனைவி மற்றும் பெற்றோர்கள் கேரள போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து ஷிம்ஜிதா தலைமறைவானார். ஆனாலும், கேரள போலீஸ் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது சுஜிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளின் கூடிய ஜமீன் நீதிம்ன்றம் அளித்துள்ள நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.