கோட்டாபயவிற்கு நெருங்கும் ஆபத்துக்கள்!

0
709

சர்வக்கட்சி அரசை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் கண்டியில் (வீர கெப்பட்டிபொல சிலைக்கு முன்பாக) குறித்த பிரகடனம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சிகளிடமும் அந்த பிரகடனம் ஊடாக கோரிக்கை விடுக்கப்படும் எனவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.