இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரதத்தில் பெருமளவான மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு புகையிரத பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏராளமானோர் புகையிரதத்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பெருமளவு மக்கள் கூட்டம் புகையிரதத்திற்கான பயணச்சீட்டை பெற்றுக் கொண்டவர்களிலும் பெருந்தொகையானோர் புகையிரதத்தில் ஏறிக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில், வழக்கமான மக்கள் கூட்டத்தை விட சுமார் ஐந்து மடங்கு அளவிலான மக்கள் கூட்டம் தற்போது புகையிரத நிலையத்தில் நிரம்பி வழிவதாகவும் தெரியவந்துள்ளது.



