தலதா ரணில் பக்கம் தாவுகிறாரா?: கட்சியின் தலைமை அதிருப்தியில்

0
128

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தொடர்ந்து கூறி வருகின்றார்.

அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டங்களில் அவர் பங்குபற்றாதிருப்பதால் கட்சியின் தலைமை அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரியவருகிறது.