இன்றைய ராசிபலன் (12மே 2022)

0
938

மேஷம்

மேஷ ராசி பல்வேறு அனுகூலமான பலன்களை இன்று நீங்கள் அடைவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் உங்களுடைய தேவைகள் மிகுதியாக இருக்கும். பேச்சில் பொறுமையாக இருப்பதோடு உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம்.

முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். என்றாலும் அதற்கான பலன் சிறப்பாக இருக்கும். ஒரு பெரிய மனிதனின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

​ரிஷப ராசி

பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் அவசியம் இருப்பதை அனுபவிப்பதற்கு கூட விக்கல் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரத்தில் சக நண்பர்கள் கூட்டாளிகள் உங்களுக்கு சில சங்கடங்களை தரக்கூடும். எதையும் சமாளித்து லாபகரமான பலனை அடைய கூடிய வாய்ப்புகள் உள்ளது.

சில நேரங்களில் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் தான் உங்களின் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு பெரிய அளவில் இருக்காது என்பதால் மற்றவர்களின் வேலையை கூட நீங்களே செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தூரப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும் உணவு விஷதத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

​மிதுனம்

மிதுன ராசி நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய இனிய நாளாக இன்று இருக்கும். நண்பர்கள் மூலமாக சில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.

பதவி உயர்வுகள் எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்க உள்ளது. உங்களுக்கு இருக்கும் வேலைப்பளு சற்று குறைய வாய்ப்புள்ளது. நிம்மதி ஏற்படக்கூடிய இனிய நாளாக இன்று இருக்கும். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் சேர வாய்ப்புள்ளது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசி நேயர்களே உங்களின் வளமும் வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு ஒரு வளமான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளவர்களின் கனவுகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. வேலைக்கு செல்பவர்கள் சக நண்பர்களின் உறுதுணையாக இருப்பார்கள் என்பதால் கடினமான வேலைகள் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள் பயணங்கள் மூலமாக ஒருசில அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

​சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல நட்புகள் உங்களைத் தேடி வரும் தொழில்ரீதியாக லாபகரமான பலன்களை நீங்கள் அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள் உங்களுக்கு இருந்த வேலைப்பளு சற்று குறைய வாய்ப்புள்ளது.

கடினமான காரியங்களைக் கூட திறம்பட செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். நல்ல நிலையை அடைவீர்கள். எங்களுக்கு இருந்த அவ பெயர்கள் எல்லாம் நீங்கி நற்பெயரை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் கூட ஒரு சில அனுகூலங்கள் ஏற்படும் இருந்த உடல் பாதிப்புகள் எல்லாம் நீங்கி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

​துலாம்

துலாம் ராசி நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் எடுக்கும். முயற்சிகள் நல்ல வெற்றியை பெற வாய்ப்புள்ளது. உங்கள் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் தொழிலில் மேன்மை ஏற்படும்.

வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் வேலைக்கு செல்பவர்கள் ஒரு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது வண்டி வாகனத்தில் செல்பவர்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் செல்வதும் அவசியம். பொதுவாக பேச்சின் பொறுமையுடன் இருந்தால் ஒரு வளமான பலனை அடையலாம்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயங்களுக்குக் கூட மனக்கசப்பு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக பேச்சில் சற்று பொறுமையாக நிதானமாக இருப்பது நல்லது. உறவினர்களுடன் சற்று நிதானமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் லாபங்கள் சிறப்பாக இருக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது மிகவும் அவசியம். எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிக்கும் சூழல் இருக்கும் என்றாலும் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பொதுவாக மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அருமையான நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களுக்கு ஆனால் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பார்க்கும்போது அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது. கூட்டாளிகளின் ஆதரவால் ஒரு வளமான பலனைப் பெறுவீர்கள்.

வேலைக்கு செல்பவர்கள் வேலைப்பளு சற்று குறைந்து சுமுகமான நிலை ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலமாகவும் ஒரு சில நல்ல செய்திகள் உங்களுக்கு வரக்கூடும் வாய்ப்பு இன்றைய நாளில் உள்ளது. முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதால் சாதகமான பலன்களை அடைவீர்கள்.

​தனுசு

தனுசு ராசி நேயர்களே பணவரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு இந்த குழப்பமான மனநிலை விலகக்கூடிய நல்ல நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் தேக்கங்கள் நீங்கி அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த வேலைப்பளு சற்று குறையும். நீங்கள் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதிருந்த பழிச் சொற்களை நீக்கி நல்ல பெயர் எடுப்பதற்கான வாய்ப்புகள் என்று ஏற்படும்.

மகரம்

மகர ராசி நேயர்களே உங்களுக்கான வளமும் வலிமையும் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ள அருமையான நாள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் ரீதியாக எவரையும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் அதன் மூலம் வளமான பலனை அடைவீர்கள்.

வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்பை பெறுகிறார்கள் இருந்தாலும் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் திட்டமிட்டு செயல்படுங்கள் பேச்சில் சற்று நிதானமாக இருப்பது அவசியம். வயதில் மூத்தவர்கள் உடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று காலதாமதமாக வாய்ப்புள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தடை தாமதம் ஏற்படலாம். எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவது நல்லது தொழில் ரீதியாக பார்க்கும்போது வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சில நேரங்களில் நீங்களே முன்னின்று செயல்களை செய்தால் தான் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சிலருக்கு தேவையற்ற பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று நிதானமாக இருப்பது அவசியம்.

​மீனம்

மீன ராசி நேயர்களே எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். இருக்கும் இடத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். தொழில் ரீதியாக சாதகமான பலன்களை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு.

உங்களுக்கு உங்க மறைமுகப் பிரச்சினைகள் எல்லாம் தீரு.ம் உறவினர்கள் மூலமாக சில சாதகமான பலன்கள் ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் கடந்தகால அவற்றை எல்லாம் நீங்கி நற்பெயர் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் ஏற்படும்