இன்றைய ராசிபலன் {07 மே 2022}

0
681

மேஷம்

இன்று உங்கள் திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலைகளில் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். காதல் உறவுகளில் இணக்கமான சூழல் காணப்படும். உங்கள் பெற்றோருடன் சில கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். கவனம் தேவை. காதல் விவகாரங்களுக்கு ஏற்ற காலம். பெரியோரை மதித்து நடப்பதும், அவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

​ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று உத்தியோகத்தில் நல்ல கௌரவத்துடன் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வு அல்லது அது தொடர்பான பேச்சுக்கள் இன்று சாதகமாக நடக்கும். இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

இன்று உங்களின் முயற்சிகள், புதிய திட்டங்கள் நல்ல வெற்றி தரக்கூடியதாக அமையும் என்பதால் புதிய முயற்சியை கை விட வேண்டாம்.

மிதுனம்

இன்று மிதுன ராசி ஏற்ற, இறக்கமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தாலும், அதே போல செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வயிறு சார்ந்த சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதில் கவனத்துடன் செயல்படுங்கள். சிலருக்கு வாயு பிடிப்பு, வாயு கோளாறு ஏற்படலாம். கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் சில வணிக திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டியது இருக்கும்.

​கடகம்

கடக ராசிக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய செயல்களுக்கான முயற்சிகள் சாதக பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். இன்று கிடப்பில் கிடந்த வேலையை செய்து முடிக்க முடியும். வர வேண்டிய பணம் வர வாய்ப்புள்ளது. பண முதலீடு நன்மை தருவதாக இருக்கும்.

​சிம்மம்

இன்று சிம்ம ராசிக்கு பல சாதக பலன்கள் தரும் சூழல் இருக்கும். அதே சமயம் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். பணியிடத்தில் வேலையை முழு கவனத்துடன் செய்து முடிக்கவும். அதன் மூலம் பிரச்னைகளை தவிர்க்க முடியும். சில பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும். வேலையில் வெற்றி அடைய உங்கள் திறமையும், நில நபர்களும் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.

​கன்னி

கன்னி ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள். சில பழைய விஷயங்கள் உங்களை மனக்கவலையைத் தரக்கூடியதாகவும், வாக்குவாதங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். சொல், செயலில் கவனமாக, நிதானமாக இருப்பதால் சச்சரவுகளை தவிர்க்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகளை சிறப்பாக எதிர்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை புரிந்து கொண்டு நடக்க முயலவும்.. உங்கள் முயற்சிக்கு முழு வெற்றி கிடைக்கும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும்.

​துலாம்

இன்று துலாம் ராசிக்கு சாதகமாகப் பலன்கள் அதிகமாக நடக்கும். உங்களின் புத்திசாலித்தனமான செயல்பாட்டால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிக கோபப்படுதல், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும்.

குழந்தைகள் வகையில் உதவியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கல்வி தொடர்பான குழப்பங்களை சில நபர்களின் வழிகாட்டுதலில் பெயரில் தீரும். இறைவனை தியானித்து மனக்குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு திருமண வாழ்வில் இனிமையான தருணங்கள் அமையக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரின் நெருக்கமும், ஆதரவும் சிறப்பாக கிடைக்கும். மங்களகரமான நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியின்மை உங்களை கவலையடையச் செய்யும்.

தனுசு

தனுசு ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்றைய தினம் நீங்கள் எந்த ஒரு செயலையும் சரியான திட்டமிடலுடன் செயல்படவும். வேலையில் தடங்கல் உண்டாக வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தை தவிர்த்து நிதானமாக எந்த ஒரு செயலையும் அணுகவும். புதிய முயற்சிகள், ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டாம்.

​மகரம்

இன்று மகர ராசிக்கு சற்று அலைச்சலான நாளாக இருக்கும். பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தவும். காதல் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் கடின உழைப்பு தேவைப்படும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும்.

​மீனம்

மீன ராசிக்கு இன்று நற்பலன்கள் சிறப்பாக கிடைக்கும். உங்களின் ஆரோக்கியம் சிறக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதும், சுமூகமான உறவை பேணுவதும் அவசியம்.

குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பணத்தை முதலீடு செய்ய உகந்த நாள். சரியான ஆலோசனையின் பெயரில் முதலீடு செய்யலாம். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்கு அதிர்ஷ்டம் துணை இருக்கக்கூடிய நாள். உங்களின் மனச்சோர்வு நீங்கும். எல்லா தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய நாள். வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணக்கூடிய நாள். கடின உழைப்புக்கு உகந்த பலனும், நற்பெயரும் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்கவும். உங்களின் பெரிய திட்டங்களுக்கு சில தடைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் இருக்கும்.