இன்றைய ராசிபலன் {21 ஏப்ரல் 2022}

0
664

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்றைய நாள் மங்களகரமான நாளாக இருக்கும். வேலையில் வெற்றியுடன் லாபமும் உண்டாகும். இன்று நீங்கள் பாராட்டுக்குரியவராக இருப்பீர்கள். இன்று நீங்கள் அமைதியின்மையாக உணர்வீர்கள், உடல்நலக்குறைவு உங்கள் கவலைக்கு காரணமாக இருக்கும். உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கும். சில முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்களின் மனம் படிப்பில் ஈடுபடாது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் மங்களகரமான நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. எதையும் எளிதாக நினைத்து இறங்க வேண்டாம். பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களும், அலைச்சலும் அதிகரிக்கலாம்.

இன்று வேலையில் இலக்கை எளிதாக எட்ட சரியான திட்டமிடலுடன் இன்று வேலையை தொடங்கவும். பணியிடத்தில் சகபணியாளர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்.
குடும்பத்தில் சலசலப்பு இருக்கும். பேச்சு, செயலில் கவனம் தேவை. நிதானமான செயல்பாடு வெற்றியைத் தரும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், விரய செலவை செய்வதையும் தவிர்ப்பது அவசியம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கல்வியில் மிக சிறப்பான நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப வெற்றி கிட்டும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். இந்த நாளில், உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களின் வேலையில் புதிய ஆற்றல் கிடைக்கும். இன்று எந்த ஒரு புதிய வேலை தொடங்கவும் சிறந்த நாள். மூதாதையர் சொத்து சம்பந்தமாக ஏதேனும் பிரச்னை நிலுவையில் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

கடகம் 

கனவு, விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாளாக அமையும். உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிப்பதோடு, தைரியமாக எதையும் செய்வீர்கள்.

தொழில், உத்தியோகம் என எப்பேற்பட்ட சூழலாக இருந்தாலும் அத்ஹு சாதகமாக இருப்பதோடு, அதில் வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் நன்றாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

சிம்மம்

இன்று பணியிடத்தில் பாதிப்பு ஏற்படும். நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயம் செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தின் தேவைகளை முழுவதுமாக கவனித்துக் கொள்வீர்கள். இந்த நாளில், சுறுசுறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே, உங்கள் ஒவ்வொரு பணிகளையும் எளிதாக முடிக்க முடியும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருக்கவும்,

கன்னி 

கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளக இருக்கும். எளிதாக முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். குறிப்பாக தொழில், உத்தியோகத்தில் நினைத்த இலக்கை அடைய சிரமமும், பணிச்சுமையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் கடினமான சூழலை சமாளித்து நல்ல வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்க விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். உறவுக்குள் குழப்பமான மனநிலை காணப்படும். செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் பணத்தை கையாளவும்.

துலாம்

துலாம் ராசிக்கு இன்று குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியைப் பெறக்கூடிய நாள். மங்களகரமான வேலை அல்லது விழாவில் ஈடுபடுவீர்கள். ஒரு விஐபி, சிறப்பு நபருடனான சந்திப்பு மறக்கமுடியாததாக இருக்கும். எந்த ஒரு வேலைக்கு ஏற்ற நாள், மனதில் புதிய உற்சாகம் தோன்றும். காதல் உறவுகளில் வெற்றி உண்டாகும். உங்கள் சேமிப்பு குடும்பத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிகம்

மிகவும் சிறப்பான பலன் தரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த இலக்கு, வேலைகள் சிறப்பாக நிறைவேறும்.
நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழில், வியாபாரம், உத்தியோகம் என எதுவாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தம்பதியிடையே நல்ல அன்பும், நெருக்கமும் இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம், தன வரவு பல்வேறு வழிகளில் கிடைக்க வாய்ப்புள்ளது.

தனுசு 

தனுசு ராசிக்காரர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்கள் உள்ளுணர்வு சாதகமானதாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் பெரிய இலக்கை நோக்கி இருக்கும். பேச்சில் கனிவாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக எந்த ஒரு பணிகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாம் நன்றாக நடக்கும்.

மகரம் 

நேயர்களே உங்களின் வளமும் வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள். மறைமுக எதிரிகள் எல்லாம் விலகி நன்மை அடைவீர்கள். தொழிலில் மேன்மை அடைய கூடிய நாள்.

புதிய விதிகளை பயன்படுத்தி சிறப்பாக லாபத்தை ஈட்டுவீர்கள். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு ஆலோசனையால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். பொதுவாக வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

கும்பம் 

கும்பம் ராசியினர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் விருப்பப்படி உங்கள் வேலைத் திட்டங்களை முடிப்பீர்கள். குடும்ப மகிழ்ச்சி நன்றாக இருக்கும். இன்று வேலையில் கவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இன்று நேரம் சிறப்பானதாக இருக்கும்.

மீனம் 

நேயர்களே நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடைந்து தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் ஒரு வளமான பலன்களை எளிதாக பெற முடியும்.

உடன் இருப்பவர்கள் உடன் சற்று நிதானமாக பேசவும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சக ஊழியர்களிடம் சற்று நிதானமாக பழகுவது நல்லது.