யாழ்ப்பாணத்தில் சிலிண்டர்: அணி திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

0
132

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் இன்றைய தினம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் அணிதிரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

Oruvan