ஃபெங்கல் புயல்: காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது

0
58

வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. அதன்பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் மழை படிப்படியாக குறைவடைந்துள்ளது.

இப்புயல் தமிழக வடக்கு கடற்கரை மற்றும் புதுச்சேரி இடையே மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தின் வடக்கு உள்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.