இலங்கையில் கொடூரம்; கடன் பிரச்சனையால் 23 வயது மகனை வெட்டி சாய்த்த தந்தை!

0
221

தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. நிதிப் பிரச்சினை காரணமாகத் தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அது மோதலாக மாறியுள்ளது.

இதையடுத்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் குருநாகல் – மாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். மேலும் மகனை கொலை செய்த குற்றச்சாட்டில் 45 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.