நடிகர் விஜய் மீது கடும் விமர்சனம்: பீஸ்ட் படத்தில் உடன் நடித்த ஷைன் டோம் சாக்கோவின் பேச்சு

0
207

022ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிய தோல்வி படமாக அவருக்கு அமைந்தது. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, மற்றும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் நடித்து இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ‘ஒரு காட்சியில் விஜய் என்னை கட்டி அழைத்துச் செல்வார். ஆனால் கனமான என்னை தூக்கும்போது முகத்தில் எந்தவொரு ரியாக்‌ஷனையும் காட்டவில்லை’

Oruvan

மேலும் ‘விஜய் என்ன மோகன்லால், மம்மூட்டியை விட சிறந்த நடிகரா? அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் அவர் ஆகச்சிறந்த நடிகர் ஆகிவிடுவாரா” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் உதாரணத்திற்கு பைபிளை விட மதுபாட்டில்கள் அதிகமாக விற்பனையாகின்றன எனவும் அதனால் ஆல்கஹால் சிறந்தது ஆகிவிடாது இல்லையா எனவும் பேசியுள்ளார். அவரின் பேச்சு விஜய் ரசிகர்களை கோபமடைய செய்துள்ள நிலையில் சமூகவலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.