இலங்கையில் நெருக்கடி; மனதைக் நெருடிய புகைப்படம்

0
769

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருகளுக்காக நீண்டவரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அவற்றினை பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதோடு நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தே எரிபொருள் பெறவேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் கால் ஒன்றினை இழந்த நபர் ஒருவர் வெற்று எரிவாயு சிலிண்டருடன் எரிவாயு பெறுவதற்கு ஊன்றுகோலுடன் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்போர் நெஞ்சை கலங்கவைத்துள்ளது.

அதேசமயம் எரிபொருளுக்காக காத்திருந்து மரணித்த சம்பவங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.