அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள்

0
173

உலகளவில் பிரபலமாக உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் தங்களை விட அதிக வயது வித்தியாசத்தில் உள்ள பெண்களை மணந்துள்ளனர்.

மகேந்திர சிங் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டோனி காதல் திருமணம் செய்து கொண்டவர். இவரது மனைவி சாக்‌ஷி இவரை விட 7 வயது குறைந்தவர். இவர்களுக்கு ஜிவா என்ற மகள் உள்ளார்.

Oruvan

இர்ஃபான் பதான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சஃபா பையிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 10 ஆண்டுகள் ஆகும்.

Oruvan

கிளென் மெக்ராத்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மெக்ராத்தின் முதல் மனைவி ஜேன் கடந்த 2008ல் இறந்துவிட்டார். இதன்பின்னர் 2010ல் சாரா என்ற பெண்ணை மெக்ராத் மறுமணம் செய்து கொண்டார். மெக்ராத்தை விட சாரா 12 வயது இளையவர் ஆவார்.

Oruvan

தினேஷ் கார்த்திக்

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முதலில் நிகிதா என்பவரை திருமணம் செய்த நிலையில் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

பின்னர் அவர் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 6 ஆண்டுகள் ஆகும்.

Oruvan

சோயப் அக்தர்

பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளரும், ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படுபவருமான சோயப் அக்தர், கடந்த 2014ஆம் ஆண்டு ரூபப் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 19 ஆண்டுகள் ஆகும்.

Oruvan