துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் என் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்த கூடாது
இது தனிமனித வெற்றியல்ல முழு நாட்டின் வெற்றி. உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும் என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார். அதோடு கோட்டாவின் முட்டாள்தனமான தீர்மானத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொது மன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்த கூடாது என்பதற்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் கோட்டாபய துமிந்தவுக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இந்நிலையில் கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பையே உயர்நீதிமன்றம் வலிதற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.