அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு அருகில் புதையல் தோண்டியமைக்காக பிரதி பொலிஸ் மாஅதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதையல் தோண்டிய பகுதி தொல்பொருள் இடமா என்பதை ஆய்வு செய்து தொடர்புடைய அறிக்கையைத் தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு நேற்று (19) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரியவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்த மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.