பிரிட்டனைச் சேர்ந்த பெண் செல்வந்தரும் மனைவியும் தங்கள் பெண் குழந்தையை அலட்சியப்படுத்தி மரணத்தை விளைவித்ததால் அவர்களுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கோன்ஸ்டன்ஸ் மார்ட்டனும் (Constance Marten) அவருடைய கணவர் மார்க் கோர்டனும் (Mark Gordon) 2022ஆம் ஆண்டில் யாருக்கும் தெரியாத இடத்தில் வாழ முற்பட்டனர்.

அப்போது கோன்ஸ்டன்ஸ் கர்ப்பமாக இருந்தார். பனிக்காலத்தில் இருவரும் அவர்களுடைய கைக்குழந்தையுடன் கூடாரத்தில் வாழ்ந்தனர்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருவரும் விட்டுவிட்டுச் சென்ற கார் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை பொலிஸார் கண்டதை அடுத்து அவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் தொடங்கியது.
பொலிஸாரின் தேடல் 2 மாதங்களாக நீடித்தது. பிரைட்டன் (Brighton) நகரில் இருவரும் பிடிபட்டனர். அதன் பின்னர் 2 நாள்களுக்குப் பின்னர் அவர்களுடைய குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.