சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய முடியவில்லை..! எம்.வி.சுப்பிரமணியம்

0
330

சுதந்திர தினம் நாட்டில் கொண்டாடப்படுகின்ற நிலையில் நாங்கள் சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று (04.02.2024) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திர தினத்தில் கூட இந்திய இழுவைப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலாளர்கள் கைது

மன்னார் வளை குடா, பாக்கு விரிகுடா ஆகிய கடற்பரப்புகளில் சுதந்திரமாக கடற்றொழில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறோம்.

குறிப்பாக கடற்படையினர் ஒன்று, இரண்டுக்கு மேற்பட்ட இழுவை படகுகளை கைப்பற்றுவதில்லை.

அரசாங்கம் இழுவை படகுகளுடன் கடற்றொழிலாளர்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.