பிக்பாஸில் இருந்து வெளியேறும் கூல் சுரேஷ்!

0
250

டாஸ்க்கில் ஏற்பட்ட விவாதத்தில் கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் கிடையில் வாக்குவாதம் ஏற்படுவது போல முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று வருகின்றது. இந்த சீசன் துவங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் மோதல்கள் வெடிக்க துவங்கின. பொதுவாக பிக் பாஸ் சீசன் துவங்கிய ஒரு சில வாரங்கள் போட்டியாளர்கள் அமைதியாகவே இருப்பார்கள்.

அதன் பிறகு தான் மோதல்களிலும் பிரச்சனைகளிலும் இறங்குவார்கள். ஆனால், இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே பிரச்சினைகள் கிளம்பி விட்டது.

அந்த வகையில் இன்று பிக் பாஸில் ”அசைஞ்சா போச்சு” டாஸ்க் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மணி பொருத்தப்பட்ட ”ஹெட் கியர்“ கொடுக்கப்படுகின்றது. மணி அடிக்காமல் பார்த்து கொள்வதுதான் டாஸ்க்.

இதில் கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து உடனே நான் கிளம்புகிறேன் என்று கூல் சுரேஷ் கூறும் பரபரப்பு ப்ரோமோ காட்சிகள் ப்ரோமோவில் காண்பிக்கப்படுகின்றது.