கூல் சுரேஷ் விஜய் தொலைக்காட்சியின் லைவ் வீடியோவில் இணைந்து அவரது மறக்க முடியாத நினைவுகள் பற்றியும் பிக் பாஸ்க்கு பிறகு வாழ்க்கை எப்படி இருப்பது என்பதை பற்றியும் பேசிய காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வார இறுதியில் கூல் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கியுள்ளார். அதில் பிரதீப் ஆண்டனி குறித்த அவர் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
‘பிரதீப் ஆண்டனி கண்டிப்பாக ஃபைனாலில் இருந்திருக்கவேண்டும். நான் எப்போதும் ஒரு விஷயத்தை கூறுவதுண்டு, திறமை இருந்தால் மட்டும் போதாது தலையெழுத்து என்று ஒன்று இருக்கிறது.
அதை தான் சொல்ல வேண்டும். பிரதீப் ஆண்டனி தான் இந்த சீசனில் வெற்றியாளராக வருவார் என எதிர்பார்த்தேன். ஒருவேளை நானும் பிரதீப்பும் மேடையில் நின்றிருந்தால் கமல் சாரிடம் சொல்லி பிரதீப்பை ஜெயிக்க வைத்திருப்பேன்.
பழைய விஷயங்களை ஞாபகம் செய்ய வேண்டாம். பிரதீப் மீது எனக்கு மிகுந்த பாசம் இருக்கிறது. கண்டிப்பாக அவன் கப் ஜெய்த்துவிடுவான் என்ற நம்பிக்கையும் இருந்தது.
பிரதீப் வெளியே செல்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. அதனால்தான் பிரதீப் இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு ஒரு முறை எச்சரிக்கை செய்துவிடலாம் என கூறியிருப்பேன்.
ஏதோ ஒன்னு செய்ய பூதம் கிளம்பிய கதையாகதான் பிரதீப்பின் வெளியேற்றம் அமைந்தது. எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது’ இவ்வாறு கூல் சுரேஷ் அந்த லைவ் வீடியோவில் பிரதீப் ஆண்டனி குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியிலும் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் மத்தியிலும் அதிக கவனத்தை ஈர்த்துவுள்ளது.