கோடைக்காலம் என்பதால் குளிர்ச்சியாக எதையாவது உண்டால் நன்றாக இருக்குமே என நாம் சிந்திப்போம். ஆனால் என்ன செய்து சாப்பிடலாம் என்ற யோசனை இருந்துகொண்டே இருக்கும்.
அதிகமாக செலவும் செய்யாமல் அதேசமயம் அட்டகாசமான சுவையில் வீட்டிலேயே கோடைக்கு இதமான தர்பூசணி ஐஸ்க்ரீம் எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தர்பூசணி – 1
- க்ரீம் மில்க் – 750 மில்லிலீட்டர்
- சர்க்கரை – தேவையான அளவு
எவ்வாறு செய்யலாம்?
முதலில் தர்பூசணிப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய தர்பூசணி துண்டுகளை கரண்டியால் நன்றாக நசுக்கி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். (மிக்ஸியில் அரைக்க வேண்டாம்).
எடுத்துக் கொண்ட தர்பூசணி சாற்றை அடி கனமான பாத்திரத்துக்கு மாற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்க வேண்டும்.
அந்த சாறானது திக்கான பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
அடுத்ததாக க்ரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து திக்கான க்ரீம் பதத்துக்கு கொண்டுவர வேண்டும்.
பின் அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஃப்ரீசரில் 5 மணித்தியாலங்கள் வரையில் வைக்க வேண்டும்.
ஐந்து மணித்தியாலம் கழித்து வெளியே எடுத்தால் அருமையான தர்பூசணி ஐஸ்க்ரீம் தயார்.