பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸின் அறக்கட்டளை தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
அல் கய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் பின்லாடன் குடும்பத்திடமிருந்து இந்த அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறக்கட்டளை சுமார் ஒரு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களை பின் லாடன் குடும்பத்திடம் பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் இவ்வாறு பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர்களான பகர் பின் லேடன், சாபீக் பின்லேடன் ஆகியோரிடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணம் பெற்றுக்கொண்டது உண்மை என்ற போதிலும் பணத்தை பெற்றுக் கொள்ளும் தீர்மானம் இளவரசரினால் எடுக்கப்படவில்லை எனவும் அது அறக்கட்டளையின் உறுப்பினர்களினால் எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களாக இளவரசர் சர்ள்ஸின் அறக்கட்டளைக்கு நிதி பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.