இலங்கையின் சர்ச்சைக்குரிய பெண்ணாகியுள்ள திலினி பிரியமாலி ஒன்றரை கோடி ரூபாவை பிரபல அறிவிப்பாளர் தம்பதிக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தம்பதியிடம் விசாரணை
தகவலறிந்த தம்பதியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தம்பதிக்கு புதிய வீடு கட்டுவதற்காக திலினி பிரியமாலி என்ற பெண் பணம் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
4 பேர் கைது

திலினி பிரியாமாலியை ஒப்பந்தம் செய்த மற்றொரு நடிகை, மாடல்கள் உட்பட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த பெண் உலக வர்த்தக மையத்தில் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றி 1000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.
தற்போது அந்த பெண்ணும் அவரது காதலர், தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.




