நடிகர் மன்சூர் அலிகானின் த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசினார்.
மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் காணொளி இணையத்தில் வைரலானது. மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து, மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சாந்தனு, பாடகி சின்மயி, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Some men think it's their birth right to insult a woman or speak about her in a most disrespectful manner. Recent video of #MansoorAliKhan is one such example. I vehemently condemn his speech. They think their "chumma comedykku sonnen" attitude will be overlooked n ignored. No,…
— KhushbuSundar (@khushsundar) November 19, 2023
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டப்பிரிவு 509 மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
The National Commission for Women is deeply concerned about the derogatory remarks made by actor Mansoor Ali Khan towards actress Trisha Krishna. We're taking suo motu in this matter directing the DGP to invoke IPC Section 509 B and other relevant laws.Such remarks normalize…
— NCW (@NCWIndia) November 20, 2023