தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எலிமினேஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது பார்வையாளர்கள் அனைவரையும் மிகழ்ச்சியடைய வைத்துள்ளது.
இவ்வாறான நிலையில் இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.
இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்த போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால், அமரக்களமாகவும் பிக்பாஸ் வீடு இருக்கிறது. இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள சக போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக்பாஸுக்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு மறுபக்கம், ஒவ்வொரு போட்டியாளராக கொஞ்ச நேரம் பிக்பாஸ் ஆக மாறியும் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் அப்படி பிக்பாஸாக மாறும் போட்டியாளர்கள், சக போட்டியாளர்களுக்கு ஜாலியான அதே வேளையில் சற்று விறுவிறுப்பை எகிற வைக்கும் வகையிலும் சில டாஸ்க்குகள் மற்றும் சீக்ரெட் டாஸ்க்குகளை கொடுக்கின்றனர்.
அப்படி ஒரு சூழலில், நடுவே மைனாவும் பிக் பாஸாக செயல்பட்டுகொண்டிருக்கும் போது ADK மற்றும் கதிரவன் ஆகியோர் நடந்து கொண்டிருக்கின்ற வேளை திடீரென கதிரவன் மயங்கி விழுகிறார்.
இதனைக் கண்டதும் பதறி போன ADK, “அசீம், அசீம் யாராச்சும் வாங்கப்பா” என பயத்தில் கத்தவும் செய்கிறார். உடனடியாக அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் அனைவரும் அங்கே வர, இது Prank என்றும் விக்ரமன் உள்ளிட்டோர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கதிரவன் கண் திறக்காத நிலையில், “இது Prank இல்ல, நாக்கு தள்ளுது” என பயத்தில் பதறி போய் தெரிவிக்கும் ADK, பிக்பாஸ் மெடிக்கல் மெடிக்கல் என்றும் கத்துகிறார்.
ஆனால், மெடிக்கல் ரூம் அருகே சென்றதும் கதிரவன் எழுந்து Prank என்றும் தெரிவிக்கிறார். அதன் பின்னர், மைனா நந்தினி கொடுத்த சீக்ரெட் டாஸ்க் என்றும் தெரிவிக்கிறார்.
எனினும் இதனை அறிந்ததும் பதறியடித்த அனைத்து போட்டியாளர்களும் கதிர் மீது டென்சன் ஆகவும் செய்கின்றனர். “Good job” என பிக்பாஸாக இருக்கும் மைனா நந்தினி சொல்ல, “நீ வெளிய வா உனக்கு இருக்கு” என்றும் அசிம் தெரிவிக்கிறார்.