கலப்படம் அடைந்து வரும் எரிபொருள்! எரிசக்தி அமைச்சு தகவல்

0
780

எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குருநாகல் – நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட எரிபொருள் மாதிரிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எரிபொருள் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஐந்தாம் திகதி நாடளாவிய ரீதியில் சுமார் 92 இலட்சம் லீற்றர் 92 ஒக்டேன் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், 472 பௌசர்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.