அசீம் செயலால் குலுங்கி குலுங்கி சிரித்த போட்டியாளர்கள்; அறைக்கு சென்ற ரச்சிதா!

0
493

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.

இந்த சீசன் சுமார் 80 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில் விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.

பிக்பாஸில் Confession அறைக்கு சென்ற ரச்சிதா: அசீம் செயலால் குலுங்கி குலுங்கி சிரித்த போட்டியாளர்கள் | Bigg Boss Confession Room Rachitha Azeem Act

அத்தோடு நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

பிக்பாஸில் Confession அறைக்கு சென்ற ரச்சிதா: அசீம் செயலால் குலுங்கி குலுங்கி சிரித்த போட்டியாளர்கள் | Bigg Boss Confession Room Rachitha Azeem Act

இவ்வாறான நிலையில் ரச்சிதாவை திடீரென Confession ரூமுக்கு வரும் படி பிக்பாஸ் அழைக்கிறார். இதனைக் கேட்டதும் சற்று குழப்பத்துடன் இருக்கும் ரச்சிதா, “Me?” என்றும் கேட்க, ஆமாம் என்றும் பிக்பாஸ் குறிப்பிடுகிறார்.

எதற்காக இருக்கும் என்ற படி, ரச்சிதா கேள்வியுடன் உள்ளே செல்வது போல தெரிகிறது. அந்த சமயத்தில், அவர் உள்ளே எப்படி எல்லாம் பேசுவார் என முதலில் மைனா நந்தினி ஜாலியாக சில விஷயங்களை செய்து காட்டுகிறார்.  

பிக்பாஸில் Confession அறைக்கு சென்ற ரச்சிதா: அசீம் செயலால் குலுங்கி குலுங்கி சிரித்த போட்டியாளர்கள் | Bigg Boss Confession Room Rachitha Azeem Act

அப்போது அனைவரையும் அழைத்த அசிம், Confession ரூமுக்குள் செல்வதற்கு முன்பு “Me?” என ரச்சிதா கேட்கும் போது அவரிடம் முக பாவனைகள் எப்படி இருந்தது என்பதை அவர் அப்படியே பவ்யமாக செய்து காட்டுகிறார்.

இதனை பார்த்ததும் மைனா, ADK, அமுதவாணன், ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் சிரிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.