உக்ரைனுக்கு வழங்கிய உறுதி; அமெரிக்காவை விமர்சித்த கிம் சகோதரி!

0
299

உக்ரைனுக்கு 31 பீரங்கிகளை வழங்குவதாக உறுதியளித்ததன் மூலம் போரின் தீவிரத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளதாக வடகொரியா விமர்சித்துள்ளது.

அமெரிக்கா வரம்பை மீறி மறைமுகமாக போரை திணித்து மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிப்பதாகவும் வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் ஆயுத உதவி குறித்து கவலை தெரிவித்துள்ள வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங் இறையாண்மை கொண்ட அரசுகளின் தற்காப்பு உரிமை குறித்து அவதூறு பரப்ப அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என சாடியுள்ளார்.