நகைச்சுவை மன்னன் வைகை புயல் வடிவேலு இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் இருந்தாலும் நடிகர் வடிவேலு, தனது தனிப் பாணியில் நகைச்சுவை விருந்து படைத்து ரசிகர்கள் மனங்களில் இடம் பதித்துள்ளார்.
தோற்றத்தையும் உடல்மொழியையும் சிறப்பாக நகைச்சுவைக்குப் பயன்படுத்துவதில் அவருக்கு ஈடு அவர் மட்டும்தான். நடை, உடை, பாவனை, தலைமுடி, கண் என அனைத்தும் அவருடைய நகைச்சுவையில் பங்களிக்கும்.

இடையில் பல பிரச்சினைகள், சர்ச்சைகள் என வடிவேலுவுக்கு இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் விலகி மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
இத்தனை நாளாக நகைச்சுவையில் நம்மை சிரிக்க வைத்த வடிவேலு, மாமன்னன் படத்தில் மாமன்னாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் மாநடிகரான உயர்ந்துவிட்டார்.
நடிப்பு என்று வந்துவிட்டால், நான் ஒரு புயல் என இந்த படத்தில் மீண்டும் நிரூபித்துவிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
விரைவில் வெளியாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். இப்படம் 28ந் திகதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நகைச்சுவை மன்னன் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
