கொழும்பு துறைமுக நகரம் – உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த வலயமாக மாற்றுதல்: அமைச்சரவையிலும் அங்கீகாரம்

0
114

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தகம் செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான தடைகளை நீக்கி, கொழும்பு துறைமுக நகரத்தை உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த விசேட பொருளாதார வலயமாக அதிகரிக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதற்காக மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை உரிய திருத்தங்களை இணைத்து திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.