சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! அரசாங்கத்துடன் இணையவுள்ள உறுப்பினர்கள்..லக்ஷ்மன் விஜேமான்ன

0
337

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான உடன்படிக்கை

இந்த எம்.பிக்கள் குழு இதற்கான உடன்படிக்கையை ஜனாதிபதிக்கு பல வழிகளின் ஊடாக வழங்கியுள்ளதாகவும் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! அரசாங்கத்துடன் இணையவுள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Samagi Jana Balawagaya Mps Joint Goverment

மேலும் இவர்களில் சிலர் தாம் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வதாக தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக குறுகிய காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.