கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
36

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ‘போர்ட் சிட்டி’ வளாகத்தில் இருந்து படகு உதவியுடன் மீட்கப்பட்டு இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் சிகிச்சைப் பலனின்றி ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் மஹரகம பகுதியில் பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.