கொழும்பு – வெல்லம்பிட்டிய பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழப்பு!

0
680

கத்திக் குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கொழும்பு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொஸ்லாந்தை, மக்கள்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெதுப்பகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியர் ஒருவர் குறித்த நபரைக் கத்தியால் குத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்தை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.