நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி வாலிபரை மிரட்டிய கல்லூரி மாணவர்!

0
365
Portrait of unrecognizable hacker with smartphone

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி வாலிபரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு மத்திகெரே பகுதியில் வசித்து வருபவர் பவன் (வயது 21). இவர் கல்லூரி மாணவர் ஆவார்.

இந்த நிலையில் மத்திகெரேயில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்த வாலிபர் ஒருவரிடம் இருந்து அவரது செல்போனை, பவன் பேசுவதற்காக வாங்கினார்.

பின்னர் பவன் அந்த செல்போனுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த நிலையில் வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய பவன், வாலிபரிடம் உனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது.

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி வாலிபரை மிரட்டிய கல்லூரி மாணவர்! | A College Student Teenager Photos Girlfriend

அந்த புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன வாலிபர் சம்பவம் குறித்து யஷ்வந்தபுரம் பொலிசில் புகார் அளித்தார்.

மேலும் அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் பவனை கைது செய்தனர்.