நாட்டின் பகுதிகளில் குளிரான காலநிலை; நுவரெலியா மாவட்டத்தில் பனித்துளி

0
451

நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மழையற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகாலை வேளையில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதுடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனித்துளிகள் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை பெய்வதில்லை எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 20 – 30 கிலோ மீற்றராகும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் கடற்பரப்பை அண்மித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.

பல பகுதிகளில் குளிரான காலநிலை - நுவரெலியா மாவட்டத்தில் பனித்துளி | Sri Lanka Weather Today

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் வழமையாகவே காணப்படுகின்றன.