போராட்டக்காரர்களுக்கு பலமாய் மாறிய பொதுமக்கள்: உணவு, தண்ணீர் வழங்கி உதவி

0
122

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக சுகாதாரத் துறை அலுவலகம் எதிரில் வீதியில் போராடி வரும் மருத்துவர்களுக்கு பலர் உதவிகள் செய்து வருகின்றனர்.

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், போராட்டம் நடக்கும் இடத்துக்கு உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் போத்தல்கள் போன்றவற்றையும் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை காலை மூத்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு உணவுகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.

”யாராவது இரவு முழுவதும் வீதியில் இருப்பார்களா? மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காகவே அவர்கள் இவ்வாறு போராடி வருகின்றனர். அவர்களும் எங்கள் பிள்ளைகள்தான் என சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தேநீர், சொக்லெட் போன்றவற்றையும் போராட்டக் களத்திலிருப்பவர்களுக்கு பொதுமக்கள், பல்கழைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.

போராடுபவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு செய்யப்படும் இவ்வாறான உதவிகள் அவர்களின் பலத்தையும் நம்பிக்கையும் மேலும் அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.