ஆசிய கண்டத்தில் மிக ஆழமான எண்ணெய் கிணறு தோண்டும் சீனா!

0
326

ஆசிய கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய் கிணறை துளையிடும் பணியை சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் எண்ணெய் வளம் நிறைந்த டாக்லமக்கான் பாலைவனத்தில் பூமிக்கடியில், சுமார் 31 ஆயிரம் அடி ஆழத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.

யூஜின் என பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் கிணறு 6 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிக பெரிய எவரஸ்ட் சிகரத்தின் உயரத்துடன் ஒப்பிடுகையில் இந்த கிணறு அதை விட 2,000 அடி அதிக ஆழம் கொண்டது என கூறப்படுகிறது.