இலங்கைக்கு உதவ முன் வந்துள்ள சீனா! சீனாவின் அதிரடி முடிவு!

0
636

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்று தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கமும் மக்களும் முகங்கொடுக்கும் சிரமங்களை சமாளித்து பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று வெய் கூறினார்.