வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்கவே என தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.